ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. 1.3.1
ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பமுடனும், உயர்வாகவும் இடம்பெரும்.
The settled rule of every code requires, as highest good,
Their greatness who, renouncing all, true to their rule have stood. (translated by Dr. G.U.Pope)
The end and aim of all treatise is to extol beyond all other excellence, the greatness of those who, while abiding in the rule of conduct peculiar to their state, have abandoned all desire.
ஒழுக்கத்தில் உறுதியானவரையே வள்ளுவர் துறவி என்று அழைக்கிறார். அவ்வாறு உறுதியான ஒழுக்கமுடையோரின் பெருமை என்றும் சான்றோரினால் உயர்வாகப் போற்றப்படும்.
Those who have good conduct are considered as saints by Valluvar.. Those who have good conduct will be in good books of the scholars..
----------------------------------------------------
துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று. 1.3.2
உலகில் இறந்தவர்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று கூற முடியுமா? அதுபோலத் தான் உண்மையாகவே பற்றுக்களைத் துறந்த உத்தமர்களின் பெருமையையும் அளவிடவே முடியாது.
As counting those that from the earth have passed away,
'Tis vain attempt the might of holy men to say. (translated by Dr.G.U.Pope)
To describe the measure of the greatness of those who have forsaken the two-fold desires, is like counting the dead.
ஒழுக்கத்தில் உயர்ந்த துறவிகளின் பெருமையை அளவிடுவது, இறந்தவர்களின் எண்ணிக்கையை அளவிடுவது போல் முடியாதது..

இருமை வகைத்தெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு. 1.3.3
நன்மை எது, தீமை எது என்பதை ஆய்ந்தறிந்து நன்மைகளை மேற்கொள்பவர்களே, உலகில் பெருமைக்கிள்ளாவார்கள்.
Their greatness earth transcends, who, way of both worlds weighed,
In this world take their stand, in virtue's robe arrayed. (translated by Dr. G.U.Pope)
The greatness of those who have discovered the properties of both states of being, renounced the world, shines forth on earth (beyong all others)

உரனென்னுந் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரனென்னும் வைப்பிற்கோர் வித்து. 1.3.4
உறுதி என்ற அங்குசம் கொண்டு, ஐம்பொறிகளை அடக்கிக் காப்பவன், துறவறம் என்னும் நிலத்திற்கு ஏற்ற விதையாவான்..
He, who with firmness, curb the five restrains,
Is seed for soil of yonder happy plains. (tranlated by Dr. G.U.Pope)
He who guides his five senses by the hook of wisdom will be a seed in the world of heaven..
ஐம்பொறிகளையும் மனஉறுதியால் அடக்கத் தெரிந்தவர் தான் துறவறத்திற்கு வித்தாவார்..
Only those who guides his five senses is considered as the seed of sainthood.
---------------------------------------------------
ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளாகோமான்
இந்திரனே சாலுங் கரி. 1.3.5
புலன்களை அடக்க முடியாமல் வழிதவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான்புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக்காட்டுகிறான்.
Their might who have destroyed 'the five', shall soothly tell
Indra, the lord of those in heaven's wide realms that dwell. (translated by Dr.G.U.Pope)
Indra, the king of the inhabitants of the spacious heaven, is himself, a sufficient proof of the strength of
him who has subdued his five senses.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார். 1.3.6
பெருமைத் தரும் செயல்களைப் புரிவோரைப் பெரியோர் என்றும், சிறுமையான செயல்களையன்றிப் பெருமைக்குறிய செயல்களைச் செய்யாதவர்களைச் சிறியோர் என்றும் வரையறுத்துவிட முடியும்.
Things hard in the doing will great men do;
Things hard in the doing the mean eschew. (translated by Dr.G.U.Pope)
The great will do things which is difficult to be done; bu the mean cannot do them.
செய்வதற்கு அரிய செயல்களைச் செய்வோர் பெரியோர்.. மற்றோர் சாதாரணமானோர்.
The difficult things can be achieved only by great people.. Common people can't do it.

சுவையொளி ஊறோசை நாற்றமென் றைந்தின்
வகைதெரிவான் கட்டே உலகு. 1.3.7
ஐம்பொரிகளின் இயல்பை உணர்ந்து அவற்றை அடக்கியாளும் திறன் கொண்டவனையே உலகம் போற்றும்.
Taste, light, touch, sound, and smell: who knows the way
Of all the five,- the world submissive owns his sway. (translated by Dr.G.U.Pope)
The world is within the knowledge of him who knows the properties of taste, sight, touch, hearing and
smell.

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும். 1.3.8
சான்றோர்களின் பெருமையை, இந்த உலகில் அழியாமல் நிற்கும் அவர்களது அறவழி நூல்களே எடுத்துக்காட்டும்.
The might of men whose word is never vain,
The 'secret word' shall to the earth proclaim. (translated by Dr.G.U.Pope)
The hidden words of the men whose words are full of effect, will shew their greatness to the world.

குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயுங் காத்தல் அரிது. 1.3.9
குணக்குன்றுகளான பெரியவர்கள் போபம் கொண்டால், அந்த கோபம் அவர்கள் உள்ளத்தில் ஒரு கணம் கூட தங்கி நிலைத்து நிற்காது.
The wrath 'tis hard e'en for an instant to endure,
Of those who virtue's hill have scaled, and stand secure. (translated by Dr.G.U.Pope)
The anger of those who have ascended the mountain of goodness, though it continue but for a
moment, cannot be resisted.
நல்லவரது கோபம், அந்த கணமே மறைந்துவிடும்
The anger of good people will vanish immediately.
--------------------------------------------------
அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்
செந்தண்மை பூண்டொழுக லான். 1.3.10
அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தனர் எனப்படுவர்.
Towards all that breathe, with seemly graciousness adorned they live;
And thus to virtue's sons the name of 'Anthanar' men give.
The virtuous are truly called Anthanar; because in their conduct towards all creatures they are
clothed in kindness.